ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
சார்… இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம். மனிதர்கள் எல்லோரும் (அனேகமாக) “நான் அடுத்தவனை விட உயர்ந்தவன்” என்று காண்பிக்கும் மனோபாவம் உடையவர்கள். அவரவர் அளவில் ...மேலும் வாசிக்க

சார்… இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

மனிதர்கள் எல்லோரும் (அனேகமாக) “நான் அடுத்தவனை விட உயர்ந்தவன்” என்று காண்பிக்கும் மனோபாவம் உடையவர்கள். அவரவர் அளவில் நாம் எல்லோருமே இதனைக் காண்பிக்கிறோம். எனக்கு 800 ரூபாய் டி ஷர்ட் அணியும்போது, சட்டையில்லாதவர்கள் நினைவுக்கு வருவதில்லை, 300 ரூ ஷர்ட் அணிந்தால் போதாதா, ஏற்கனவே 20 டி ஷர்ட்கள் இருக்கிறதே என்றெல்லாம் நினைவுக்கு வருவதில்லை. 60 ரூபாய்க்குள் கடையில் டிபன் சாப்பிட்டால் போதாதா, மாருதி 800 மட்டும் போதாதா என்று ஒவ்வொன்றிலும் எனக்கு மற்றவர்கள் நினைவு வருவதில்லை. என் மகன் (figurative), பிராண்டட் உடைகளைத்தான் வாங்குகிறான், உடுத்துகிறான். இத்தனைக்கும் நாம் எல்லோரும், காந்தி, அரைக் கோவண உடையில் அவரின் எளிமை, நடந்து செல்வது என்று இதனைப் படிக்காமல் வருவதில்லை. பணம் சம்பாதிக்க சம்பாதிக்க நாம் நம் வசதிகளை, அவைகளைச் சம்பாதிக்காத நம் வாரிசுகளுக்குக் கூடுதல் வசதி என்று பெருக்கிக்கொண்டே போகிறோம். நம் எல்லோருக்கும் இந்த அரகண்ட் மனப்பான்மை இல்லாவிட்டால் எப்படி நம்மால் நிம்மதியாக ஹோட்டலில் சாப்பிட்டுஙிட்டு வர முடியும்? வாழ்க்கையில் லட்சியம் இல்லாத லட்சங்களைப் பார்க்காத (பெரும்பான்மையைச் சொல்கிறேன்) நமக்கே இப்படிப்பட்ட மென்டாலிட்டி இருக்கும்போது, லட்சம் கோடிகளை சர்வசாதாரணமாகப் புரட்டக்கூடிய பணக்கார்ர்களுக்கு மனநிலை எப்படி இருக்கும்? வாய்ப்பு இருந்தால் பிறருக்குக் காண்பிக்க முடிந்தால் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க இழைகளால் முழுவதும் பின்னப்பட்ட ஜட்டிகளையே அவர்கள் அணிவார்கள். வைத்திருக்கும் பணத்திற்கேற்ற மனித மனம். இதில் நான் ஆச்சர்யத்தைக் காணவில்லை. அலிபாபா தளத்தை உருவாக்கியவர் சிறிய வயதிலேயே தன் வேலையைத் துறந்துவிட்டார். சம்பாதித்த பணத்தை செலவு செய்ய நேரமில்லை என்று.

எனக்கு எது ஆச்சர்யம் என்றால், தனக்குக் கிடைத்த கோடி ரூபாயைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, தான் நம்பும் கொள்கைகளுக்காக டீ குடித்துவிட்டு 90 வயதிலும் உழைக்கும் நல்லக்கண்ணு போன்றவர்களைப் பார்த்ததுத்தான். அம்பானிகள், பெரும்பான்மையான, 90%க்கும் அதிகமான இந்திய மக்களின் மென்டாலிடி உடையவர்கள்தான்

அதனால் அளவுக்கு மீறிய ஆடம்பரம் என நாம் நினைப்பது அவரவர் அளவீட்டுகோலின்படி. அது தவறான அளவீடு.

நாமெல்லோரும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடாதவர்கள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

அய்யா ..! தாங்கள் முன்பு பதிவாக்கிய :– // ஆங்கிலத்தில் food,cloth & shelter ...மேலும் வாசிக்க

அய்யா ..! தாங்கள் முன்பு பதிவாக்கிய :– // ஆங்கிலத்தில் food,cloth & shelter –
இந்தியில் ரோட்டி, கப்டா, மகான்.
தமிழில் – உண்ண உணவு, உடுக்க உடை,
இருக்க இடம்.
உலகில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும்
முதல் இடம் கொடுப்பது,
முக்கியத்துவம் கொடுப்பது
இந்த மூன்றுக்கும் தான்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் –
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று

-நாம் அடிமையாக இருந்த காலத்திலேயே
பாரதி சொன்னான். ஆனால் – இன்று ..?

இந்த அம்பானிகளுக்கு இத்தனை பணம்
எங்கிருந்து வந்தது ?
அத்தனையும் இந்த நாட்டு மக்களிடமிருந்து
வந்தது தானே ?
பல்வேறு விதங்களில் சுரண்டிப் பறித்தவை
தானே ?
போகும்போது எதைக் கொண்டு போனார்
இவர்களது தந்தை –
மூடிய கைகளைத் தவிர ?

இவர்கள் எல்லாம் வெறும் பணம் உற்பத்தி
செய்யும் இயந்திரங்கள் மட்டும் தானா ?
சக மனிதர்களின் சுக துக்கங்களில்
பங்கு கொள்ளும் மனமே
இவர்களுக்கு இல்லையா ?
அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்தால் –
இங்கே வேண்டுமானால் லைசென்ஸ்
கிடைக்கலாம் –
முடிவில் – மேலே போகும்போது
யார் லைசென்ஸ் கொடுப்பார்கள் ? //

ஏழு ஆண்டுகளுக்கு முன் தங்களின் கேள்விகள் இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மையான நிலை — ஒளிர்கிறது .. வளர்கிறது .. டிஜிட்டல் இந்தியா …? என்பதெல்லாம் யாருக்கு என்பது பற்றி இறுதி பகுதியில் வெளியிடுவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு …!!!