பதிவர்
thiruchchikkaaran


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
எங்கள் பகுதியில் இப்போது நடந்த குடி அரசு தின விழாவிற்கு வந்திருந்த பல இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்கள்! ...மேலும் வாசிக்க

எங்கள் பகுதியில் இப்போது நடந்த குடி அரசு தின விழாவிற்கு வந்திருந்த பல இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றார்கள்!

//உண்மையில் அவர்களுக்கு இருப்பது இந்திய வெறுப்பு / காழ்ப்பு மட்டுமே// இது மிகத் தவறான கருத்து. அபாயமான விஷக் கருத்துக்களை உங்கள் மனதில் யாரோ புகுத்தியிருக்கிறார்கள்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பர் rajshree_cmb,, வணக்கம், //எங்கள் முட்டாள் தமிழன் இவர்களை சரியாக புரிந்து கொண்டு புறக்கணித்தாலே இவர்களே ஊரை விட்டு ஓடி விடுவார்கள், ...மேலும் வாசிக்க

நண்பர் rajshree_cmb,,

வணக்கம்,

//எங்கள் முட்டாள் தமிழன் இவர்களை சரியாக புரிந்து கொண்டு புறக்கணித்தாலே இவர்களே ஊரை விட்டு ஓடி விடுவார்கள், கஷ்டப்பட்டு விரட்டியடிக்க வேண்டிய அவசியமில்லை. //

கருத்து சரியானது! “ஒரு வேளை உணவைப் பெற்றுக் கொண்டு மிகச் சிறந்த ஆன்மீக உண்மைகளைத் துறவிகள் மக்களுக்கு இந்தியாவில் தருகிறார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

பில்லியனேர் பீடாதிபதிகளிடம் பணத்தையும் மனத்தையும் கொட்டி விட்ட நிலை இந்தியாவில். இந்நிலையில் பட்டினத்தார் சுவாமிகள், தியாகராஜ சுவாமிகளைப் போல ஒரு வேளை உணவுக்கு பிச்சை எடுத்து வாழும் ஆன்மீக வாதிகள் உருவானாலும் அவர்களுக்கு உணவளித்து ஆன்மிகம் பெறும் பழக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் வருமா?

//அப்போ தேசிய கீதத்தில் எப்படி பற்று வந்தது, அதையும் கொஞ்சம் விளக்குவீர்களா ? இது சப்பைக்கட்டு//

சப்பைக் கட்டு கட்டவில்லை!

மடங்கள் உண்மையிலேயே பற்றற்ற நிலையை கடைப் பிடிக்கின்றனவா , அல்லது சார்பிலே சிக்கி இருக்கின்றனவா என்று கேட்டு இருந்தேன்!

//இந்த உலகம் என்பது ஒரு தோற்றம், அது மாறி விடும், அதில் பற்றுக் கொண்டால் உன் மனம் சிக்கி விடும், எனவே சிக்கலில் இருந்து விடுதலை பெறும் வழியை சிந்திக்க வேண்டும் என்பதுதான் சங்கராச்சாரியாரின் கோட்பாடு. (சித்தர் புத்தர் முனிவர் என பல்வேறு இந்திய ஆன்மீக சிந்தனையாளர்களின் அடிப்படைக் கருத்தும் இதே)

ஆனால் சங்கர மடங்கள் எனச் சொல்லப் படுபவை இந்த எண்ணத்தை ஒட்டி செயல் படுகிறார்களா அல்லது இந்த உலக விவகாரங்களில் மனதைச் செலுத்தி மாட்டிக் கொள்கிறார்களா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

முதலில் துறவிகள் என்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது அவசியமா?//


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@நண்பர் வரதன் வணக்கம் , இந்த உலகம் என்பது ஒரு தோற்றம், அது மாறி விடும், அதில் பற்றுக் ...மேலும் வாசிக்க

@நண்பர் வரதன்

வணக்கம் ,

இந்த உலகம் என்பது ஒரு தோற்றம், அது மாறி விடும், அதில் பற்றுக் கொண்டால் உன் மனம் சிக்கி விடும், எனவே சிக்கலில் இருந்து விடுதலை பெறும் வழியை சிந்திக்க வேண்டும் என்பதுதான் சங்கராச்சாரியாரின் கோட்பாடு. (சித்தர் புத்தர் முனிவர் என பல்வேறு இந்திய ஆன்மீக சிந்தனையாளர்களின் அடிப்படைக் கருத்தும் இதே)

ஆனால் சங்கர மடங்கள் எனச் சொல்லப் படுபவை இந்த எண்ணத்தை ஒட்டி செயல் படுகிறார்களா அல்லது இந்த உலக விவகாரங்களில் மனதைச் செலுத்தி மாட்டிக் கொள்கிறார்களா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

முதலில் துறவிகள் என்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது அவசியமா? இதைக் கேட்டால் சுவாமி விவேகானந்தர் பல மேடைகளில் பேசி இருக்கிறார் என்பார்கள் .

ஆனால் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்ட கூட்டங்களின் பேசு பொருள், “ஆன்மீகத்தினால் ஒருவர் எப்படி வலிமை அடைய முடியும், மத நல்லிணக்கம், நசுக்கப் பட்டோர் முன்னேற்றம், சாதிப் பிரிவினை எதிர்ப்பு, நாட்டுப் பற்று, மக்கள் முன்னேற்றம்” …போன்றவையே. தான் சொல்வதை மக்கள் மனதில் உரமாக ஆற்றும் திறன் அவருக்கு இருந்தது! சடங்குக்கு மேடையில் வந்து அமர்ந்ததில்லை அவர்.

செல்லும் பாதையைப் பார்த்துச் செல்ல வேண்டியது அவரவர்கள் தான்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராஜாவின் பேச்சு ஏற்புடையது அல்ல. வைரமுத்து அவர்களின் மனம் புண்பட்டு இருப்பதை உணர முடிகிறது. ஆனால் அரசியல்வாதிகள், சிந்தனையாளர்களின் ...மேலும் வாசிக்க

ராஜாவின் பேச்சு ஏற்புடையது அல்ல. வைரமுத்து அவர்களின் மனம் புண்பட்டு இருப்பதை உணர முடிகிறது.

ஆனால் அரசியல்வாதிகள், சிந்தனையாளர்களின் கருத்துக்களைத் தவிர சாதாரண மக்கள் பலர் ஆண்டாள் அம்மையாரை கடவுளாக வழி படுகின்றனர், அவர்கள் மனம் மிகவும் புண்படும் வகையில் அமைந்து விட்டது அந்த நிகழ்வு.

எந்த ஒரு மானுடனுடனும் திருமணமோ உறவோ இல்லை என ஆண்டாள் திட்ட வட்டமாகக் கூறி விட்டார். கடவுளை கணவனாக வரிக்க வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறு எந்த பற்றோ, ஆசையோ, குறிக்கோளோ கிடையாது.

வைரமுத்துவின் தமிழ்ப் புலமை யாவரும் அறிந்ததே. ஆண்டாள் அம்மையாரின் எண்ண ஓட்டத்தை அவர் நன்றாக அறிந்திருக்க முடியும்.

‘யாகாவாராயினும் நாகாக்க’ என்கிற வள்ளுவரின் வார்த்தை எவ்வளவு மதிப்பு மிக்கது!


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ நண்பர் Dr. RAJENDRAN Subramanian //விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் நோக்கோடு உட்கார்ந்து இருந்தாரா, அல்லது நிஜமாகவே வேறு ஏதாவது சிந்தனைக் ...மேலும் வாசிக்க

@ நண்பர் Dr. RAJENDRAN Subramanian

//விஜேயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் நோக்கோடு உட்கார்ந்து இருந்தாரா, அல்லது நிஜமாகவே வேறு ஏதாவது சிந்தனைக் குவிப்பில் ( அதாவது தியானத்தில்) இருந்தாரா என்று சொல்ல முடியாது. //

செய்திகளை படிக்கும் போது நானும் முதலில் அது ஒரு இன்டென்சனல் என்று நினைத்தேன். ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கும்போது அவர் கண் நன்றாக மூடி இருந்தது.அது ஒரு அன் இன்டென்சனல் செயல் போல இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதினேன்.

எது உண்மை என்பது அவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் !


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க