பதிவர்
krishnaswamy


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
முழங்கால் வலி… அன்புள்ள அம்மா ., தங்களின் முழங்கால் வலி என்ற கட்டுரையை உங்கள் தளத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது… நான் கன்னியாகுமரி மாவட்டம், ...மேலும் வாசிக்க

முழங்கால் வலி…

அன்புள்ள அம்மா .,
தங்களின் முழங்கால் வலி என்ற கட்டுரையை உங்கள் தளத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது… நான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்… கடந்த ஒரு வருடமாக முடக்கு வாதம் என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறேன்… இந்த நோயால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கும் செல்ல இயலவில்லை.. இந்த நோயை பற்றி சில வரிகள்…

ரியுமடாய்ட் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வாத நோய்

இந்தியாவில் சுமார் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு வாத நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மூட்டு வாத நோய் ஆட்டோ இம்யூன் வியாதிகளுள் மிக முக்கிய இடத்தில் இருப்பதற்கு காரணம், இந்த நோய் தரும் வலியும் அதனால் ஏற்படும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் தான் .

தாங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது உங்களின் சொந்த கருத்தா? எனென்றால் வலியோடு எப்படி உடற்பயிற்சிகள் செய்வது என்பதுதான்? மேலும் எந்த ஒரு எலும்பு டாக்டரிடம் சென்றாலும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்கிறார்கள். தேய்மானமான மூட்டுடன் எப்படி 20 வயதில் இளைஞர்கள் போல் நடமாடி திரிவது? உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்…


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க