பதிவர்
Koil Pillai


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அருமையான கதை, அம்மாவை நினைக்கும்போதெல்லாம் என் கண்ணீர் என் இதயத்தை நனைத்து விடுகிறது. "ரஞ்சனி கூப்பிடும் போது என் ஃபோன் என்கேஜ்ட் என்றால் ...மேலும் வாசிக்க
அருமையான கதை, அம்மாவை நினைக்கும்போதெல்லாம் என் கண்ணீர் என் இதயத்தை நனைத்து விடுகிறது.

"ரஞ்சனி கூப்பிடும் போது என் ஃபோன் என்கேஜ்ட் என்றால் ரஞ்சனிக்கு கோபம் வரும். ஆனால் அவளை நான் கூப்பிடும் போது அவள் தன் அம்மாவுடன் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாளைக்கு 4, 5 முறை அவள் அம்மா, அப்பாவுடன் பேசுவது என்பது டிஃபால்ட்".

"ரஞ்சனி தினமும் தன் பெற்றோருடன் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போவது வரை மூன்று, நான்கு முறையேனும் பேசும் போது நானும் அவள் பெற்றோருக்கு ஹலோ சொல்ல வேண்டும். ஆனால், நான் என் அம்மாவுக்கு?

(ரஞ்சினி என்ற இடத்தில் அவரவர் வசதிக்கேற்ப(??) வேறு வேறு பெயர்களை போட்டுக்கொள்ளலாம்).

இவைகூட ஒரு கணவனுக்கு பல வேளைகளில் நெஞ்சிலே ஒரு பெரும் பாரத்தையும் அம்மாவிடம் பேசமுடியவில்லையே என்ற ஒரு குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிடும் .

மேலும் டோக்டர்,கோன்ஷியஸ் போன்று பல சொற்களை "மண்வாசனையோடு??" இன்னமும் , உலகம் முழுவதிலும் உள்ள மலையாளி தாதியர் சக ஊழியருடனும் , நோயாளிகளிடமும் பிரயோகிப்பதால் ஒட்டுமொத்த இந்திய தாதியர்கள் "நன் மதிப்பு??" நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!!!.

அருமையான சிந்தனையை அழகிய நிகழ்ச்சி கோர்வையாக கொடுத்தமை பாராட்டுக்குரியது.

வாழ்த்துக்கள்.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுடுகாட்டுக்கூரைகள் வேய்வதிலும் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களால், இத்தகு தொழிலாளர்கள் பயன்படுத்த வாங்கப்படவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களில் கொள்ளை அடிக்க வாய்ப்பு இருப்பதால் மாற்று நவீன வழிமுறைகளை வழிமொழியாமல் இறுகின்றரோ ...மேலும் வாசிக்க
சுடுகாட்டுக்கூரைகள் வேய்வதிலும் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களால், இத்தகு தொழிலாளர்கள் பயன்படுத்த வாங்கப்படவேண்டிய பாதுகாப்பு உபகரணங்களில் கொள்ளை அடிக்க வாய்ப்பு இருப்பதால் மாற்று நவீன வழிமுறைகளை வழிமொழியாமல் இறுகின்றரோ என்ற கேள்வி எழுகிறது.

பட இயக்குனரின் துணிச்சலும் மனிதாபிமானமும் அவர்தம் உள்ளத்தின் ஆதங்கமும் வணக்கத்துடன் அங்கீகரிக்கப்படவேண்டியாவை.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்ணல் காந்தியையும் அன்னை தெரேசாவையும் ஐயா அப்துல் கலாம் அவர்களை இணைத்துக்கொண்டுதான் நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வதை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள். பதிவின் துவக்கமாய் இருக்கும் ...மேலும் வாசிக்க
அண்ணல் காந்தியையும் அன்னை தெரேசாவையும் ஐயா அப்துல் கலாம் அவர்களை இணைத்துக்கொண்டுதான் நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வதை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

பதிவின் துவக்கமாய் இருக்கும் அந்த புகைப்படம் எனக்கு சிலிர்ப்பை உண்டாக்கியது ஆனந்த கண்ணீரோடு.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நானும் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ந்துபோனேன். இலவச சிகிச்சைபெற்றுக்கொண்டு இழி செயலுக்கு துணைபோகும் அதிகார மையத்திலுள்ளவர்களை என்ன சொல்வது? மருத்துவம் சேவை என்பதை கடந்து தொழிலாக ...மேலும் வாசிக்க
நானும் இந்த செய்தியைக்கேட்டு அதிர்ந்துபோனேன்.

இலவச சிகிச்சைபெற்றுக்கொண்டு இழி செயலுக்கு துணைபோகும் அதிகார மையத்திலுள்ளவர்களை என்ன சொல்வது? மருத்துவம் சேவை என்பதை கடந்து தொழிலாக மாற்றம் அடைந்ததன் விளைவே இத்தகு அவலங்களுக்கு காரணம்.

கோ.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விதண்டா வாதங்களைக் நகைச்சுவை உணர்வுடன் கேட்கும்போது .....விதண்டாவாதிகளை தவிர ஏனையோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. அருமை. கோமேலும் வாசிக்க
விதண்டா வாதங்களைக் நகைச்சுவை உணர்வுடன் கேட்கும்போது .....விதண்டாவாதிகளை தவிர ஏனையோருக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

அருமை.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாசிப்பின்பால் உங்களுக்கிருக்கும் நேசிப்பின் கன பரிமாணம் பதிவுகளில் பிரதிபலித்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நாட்களின் பொழுதை நல்லவிதமாக பயன்படுத்துவதோடு அதனை நானில நன்மைக்காக பதிவுகளாக்கி ...மேலும் வாசிக்க
வாசிப்பின்பால் உங்களுக்கிருக்கும் நேசிப்பின் கன பரிமாணம் பதிவுகளில் பிரதிபலித்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நாட்களின் பொழுதை நல்லவிதமாக பயன்படுத்துவதோடு அதனை நானில நன்மைக்காக பதிவுகளாக்கி பகிர்தல் போற்றுதற்குரியது.

நூலக சிறப்பு இன்னும் மிளிர அதன் பயன்பாடு மேலும் விரிய வாழ்த்துக்கள்.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மகாவித்வானின் தமிழார்வமும் கற்கும் வாஞ்சையும் மெய் சிலிர்க்கவைத்தாலும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகர் அவரக்ளின் கெடுபிடிகளும் ஞான செருக்கும் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. தமிழ் கற்றால் ...மேலும் வாசிக்க
மகாவித்வானின் தமிழார்வமும் கற்கும் வாஞ்சையும் மெய் சிலிர்க்கவைத்தாலும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகர் அவரக்ளின் கெடுபிடிகளும் ஞான செருக்கும் கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. தமிழ் கற்றால் அத்தனை ஆணவம் தலைக்கேறுமோ?

வள்ளுவன் இளங்கோ பாரதி கற்றுத்தந்த தமிழுக்கு யாரேனும் கட்டணம் செலுத்தியிருந்தால் கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்.

தமிழ் அந்த அளவிற்கு ஒரு வியாபார பொருளாகவும் எளியோருக்கு ஒரு எட்டா கனியாகவும், பெரும் பாரமாகவுமா இருந்தது?

கடுக்கன் விற்கும் அளவிற்கு இடுக்கண் விளைவித்தவர் எத்தனை பெரிய தமிழறிஞராக இருந்தாலும் அவர் செயலில் எனக்கு உடன்பாடு இல்லை.

புதிய தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றிகள்.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துகள் கவிஞரே. கோ.மேலும் வாசிக்க
வாழ்த்துகள் கவிஞரே.

கோ.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சகஜம் என வாசிக்கவும் - பிழை திருத்தம்.மேலும் வாசிக்க
சகஜம் என வாசிக்கவும் - பிழை திருத்தம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மகேஷ் கதவை திற காற்று வரட்டும் என்பதுபோல கார்டை காட்டு கதவு திறக்கும் என்றாகிவிட்டது. இதுபோல் ஏற்படுவது சஜம்தான் - இயந்திரம்தானே? ...மேலும் வாசிக்க
மகேஷ்

கதவை திற காற்று வரட்டும் என்பதுபோல கார்டை காட்டு கதவு திறக்கும் என்றாகிவிட்டது.

இதுபோல் ஏற்படுவது சஜம்தான் - இயந்திரம்தானே? . இதுபோன்ற சமயங்களில் அருகிலேயே மெட்ரோ அலுவலர்கள் இருப்பார்கள் அவர்கள் நம்மை வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்.

நீங்களும் அப்படித்தான் சென்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

தொடருங்கள்.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யாரை நம்புவது எதை நம்புவது? குருவி உட்கார பனம்பழம் விழுந்திருக்கலாம் அனால் அதை விஷயமாக்கி பின்னர் விஷமமாக்கிவிட்டனர். ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் ...மேலும் வாசிக்க
யாரை நம்புவது எதை நம்புவது? குருவி உட்கார பனம்பழம் விழுந்திருக்கலாம் அனால் அதை விஷயமாக்கி பின்னர் விஷமமாக்கிவிட்டனர்.

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருந்தால்தானே உலகம்,
சரியான பேலன்ஸுடன் ,சரியாமல் உழலமுடியும்?

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை". இப்படி கூறும் பேராசிரியர், முடிவை தொட்டபிறகு நம்மை முழுமையாக ...மேலும் வாசிக்க
"முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை".

இப்படி கூறும் பேராசிரியர், முடிவை தொட்டபிறகு நம்மை முழுமையாக வழி நடத்தி இருக்கலாம். இப்படி அரை கிணறுவரை அழைத்து சென்று அம்போ என விட்டதுபோல் இருக்கின்றது அவரது மேற்கூறிய வாக்குமூலம்.

ஒருவேளை முடிவை தொட்டிருந்தால் அவரது முடிவு வேறாக இருந்திருக்குமோ?

"ஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்".

விதையும் விருட்சமும் ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டுதான் முளைக்கும் வளரும் ஆனால் அதன் வேர்களும் கிளைகளும் பூக்களின் நறுமணங்களும் மகரந்த துகள்களும் விதைகளும் எல்லை கடந்து பரவி வியாபிக்கும் என்பது உலகோர் அறிந்த உண்மை.

அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு.

புத்தக வடிவில் வரப்பெற்ற அனைத்துமே பொக்கிஷ உண்மைகள் புதைக்கப்பட்ட கருவூலங்கள் என்று போற்றத்தக்கவை அல்ல.

"சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை".

இது பெரியவரானபிறகு ஞானப்பழமானவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், எத்தனை வயதானாலும் தடுமாறி தவறிவிழுந்து , தவறுகளுக்கு மத்தியில் திடமனதுடன் வாழ நினைப்பவர்களுக்கு இறுதிவரை கடவுள் பயம் தேவை ஓரளவிற்கு வாழ்க்கையில் நம்பிக்கையெனும் பிடிமானத்துடன் நடைபோட.

மதங்களை விவாதப்பொருளாக்கவேண்டாம் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பே போதும் மேலும் எண்ணெய் வார்ப்பது எதற்கு? என்பது என் கருத்து.

கருத்திக்களை கூற எல்லோருக்கும் உள்ள உரிமையுடன் படைக்கப்பட்டிருக்கும் பேராசிரியரின் கருத்துக்களடங்கிய புத்தக அறிமுகத்திற்கு நன்றிகள். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

கோ.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெங்கட், நல்ல தகவல். ஆமாம் நீங்கள் புகைபடமெடுத்த அந்த புதுப்பெண் நன்றாக தமிழ்பேசுவது வியப்பு. ”மாமோய்.... என்ன தனியா உட்டுட்டு நீங்க எங்கே ...மேலும் வாசிக்க
வெங்கட்,

நல்ல தகவல்.

ஆமாம் நீங்கள் புகைபடமெடுத்த அந்த புதுப்பெண் நன்றாக தமிழ்பேசுவது வியப்பு.
”மாமோய்.... என்ன தனியா உட்டுட்டு நீங்க எங்கே போனீங்க! பாருங்க இந்தாளு என்னை ஃபோட்டோ புடிக்கறாப்ல!”

அரியும் சிவனும் ஒன்னு .. இதை அறிந்தவர் வாயில கிரீம் பண்ணு.

வாழ்த்துக்கள்.

கோ


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெங்கட், மேகங்களில்தான் எத்தனை வடிவங்கள் நிறங்கள் , நிமிடத்திற்கு நிமிடம் உருவத்தை மாற்றினாலும் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் மேகங்கள் மூலம் உங்களுக்கு நான் அனுப்பும் தூது, ...மேலும் வாசிக்க
வெங்கட்,

மேகங்களில்தான் எத்தனை வடிவங்கள் நிறங்கள் , நிமிடத்திற்கு நிமிடம் உருவத்தை மாற்றினாலும் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் மேகங்கள் மூலம் உங்களுக்கு நான் அனுப்பும் தூது, " அருமை, வாழ்த்துக்கள்".

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெங்கட், ஒட்டகத்தின் பேரன்பு என் எலும்புகளையும் சிலிர்க்கவைக்கின்றது-- "என்பும் உரியர் பிறர்க்கு". இறந்த ஒட்டகங்களின் எலும்புகளை அழகிய கைவினை பொருட்களாக மாற்றி இருக்கும் ...மேலும் வாசிக்க
வெங்கட்,

ஒட்டகத்தின் பேரன்பு என் எலும்புகளையும் சிலிர்க்கவைக்கின்றது-- "என்பும் உரியர் பிறர்க்கு".

இறந்த ஒட்டகங்களின் எலும்புகளை அழகிய கைவினை பொருட்களாக மாற்றி இருக்கும் அந்த கைவினைஞருக்கு பாராட்டுக்கள். அவற்றை படமெடுத்து பதிவோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

துபாயில் ஒட்டகப்பால் குடித்த நினைவு வருகிறது.

கோ

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க