பதிவர்
Aekaanthan


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
@ ஸ்ரீராம்: நிறைய இருக்கிறது. விளக்குகிறேன் என்று ஆரம்பித்தால் நீண்டுவிடும். எனவே, கிட்டத்தட்ட சுருக்கி, அதே சமயத்தில் விஷயத்தின் சாரத்திற்கு பங்கம் வராமல், சொல்லவே ...மேலும் வாசிக்க

@ ஸ்ரீராம்: நிறைய இருக்கிறது. விளக்குகிறேன் என்று ஆரம்பித்தால் நீண்டுவிடும். எனவே, கிட்டத்தட்ட சுருக்கி, அதே சமயத்தில் விஷயத்தின் சாரத்திற்கு பங்கம் வராமல், சொல்லவே முயன்றுள்ளேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ஸ்ரீராம்: ‘உண்மையைச் சொல்லட்டுமா’ என்றுகேட்டு உண்மைவழி நிற்கிறீர்களா இல்லை, ‘இன்னும் பக்குவப்படவில்லை’ எனச் சொல்லி ஓட்டமெடுக்கப் பார்க்கிறீர்களா! ...மேலும் வாசிக்க

@ஸ்ரீராம்:

‘உண்மையைச் சொல்லட்டுமா’ என்றுகேட்டு உண்மைவழி நிற்கிறீர்களா இல்லை, ‘இன்னும் பக்குவப்படவில்லை’ எனச் சொல்லி ஓட்டமெடுக்கப் பார்க்கிறீர்களா!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Bhanumathy Venkateswaran: வாழ்வில், உண்மை தவறாதிருத்தல் அல்லது உண்மை வழி செல்லுதல் (to be righteous or to be on the ...மேலும் வாசிக்க

@Bhanumathy Venkateswaran:

வாழ்வில், உண்மை தவறாதிருத்தல் அல்லது உண்மை வழி செல்லுதல் (to be righteous or to be on the righteous path) என்பது,’ உண்மை பேசுதல்’ சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான்.

இங்கு quote செய்யப்பட்டிருப்பது பகவத்கீதை ‘வாக்கு’ பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பது மட்டுமே. சராசரி மனிதன் வாழ்வில், எதையாவது சொல்லிக்கொண்டே செல்கிறான்-என்ன பேசுகிறோம், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற பிரக்ஞை இல்லாமலேயே. வாயிலிருந்து சரளமாக, கிட்டத்தட்ட reckless-ஆக பேச்சு வருவது இயல்பாகிவிடுகிறது. அப்போது அந்த பேச்சு அல்லது வாக்கு என்பது எப்படி இருந்தால் உத்தமம் – குறிப்பாக உண்மைவழி வாழ விரும்புபவனுக்கு- என்பதை ‘highlight’ செய்யத்தான் ’வாக்கைப்பற்றி’ கீதை அவ்வாறு அழுத்தி, emphasize செய்து சொல்லியிருக்கவேண்டும். அதை அந்த நிலையில், அதற்காகமட்டுமேதான் குறிப்பிட்டிருக்கிறேன் கடைசி பாராவில்.
இருப்பினும், படிப்பவர்களுக்கு ஒரு குழப்பம் இதில் வந்துவிடக்கூடாதே என்பதற்காக ‘உண்மைவழி நிற்றலில், ’பேச்சு என்பது’ என்று இப்போது சேர்த்திருக்கிறேன்.

நன்றி.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Geetha Sambasivam : நீங்கள் சொன்னதைப் படித்தேன். வாக்கு என்பது எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறதெனினும் இதனை செவ்வனே பயன்படுத்துவோரே சிறந்தவர் எனப் புரிகிறது. அந்த லிஸ்ட்டில் ...மேலும் வாசிக்க

@Geetha Sambasivam :

நீங்கள் சொன்னதைப் படித்தேன். வாக்கு என்பது எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறதெனினும் இதனை செவ்வனே பயன்படுத்துவோரே சிறந்தவர் எனப் புரிகிறது. அந்த லிஸ்ட்டில் என் பெயர் வர, சரியாக முயலாது காலம் கழித்திருக்கிறேனே எனவும் மனது சொல்கிறது..

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Bhanumathy Venkateswaran : வருகைக்கு நன்றி. தொடருங்கள். நானும் இதைச் சாக்கிட்டு மேலும் படித்துக்கொண்டிருக்கிறேன்.. எபி சிறுகதை – பாராட்டுக்கு நன்றி ...மேலும் வாசிக்க

@Bhanumathy Venkateswaran :
வருகைக்கு நன்றி. தொடருங்கள்.
நானும் இதைச் சாக்கிட்டு மேலும் படித்துக்கொண்டிருக்கிறேன்..

எபி சிறுகதை – பாராட்டுக்கு நன்றி

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ Sriram: தலை முக்கியம்! ‘Take care of this (pointing to the head). This is the only thing ...மேலும் வாசிக்க

@ Sriram: தலை முக்கியம்!

‘Take care of this (pointing to the head). This is the only thing you have..’
-J Krishnamurti

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ GM Balasubramaniam: வருக! சில நாட்கள் முன் இதை பதிவில் எழுதினீர்களா? பார்த்தமாதிரியே தெரியவில்லை.. ஒருவேளை, இங்கே கவிதை வடிவம் கொடுத்து, அங்கே வேறு ...மேலும் வாசிக்க

@ GM Balasubramaniam:
வருக!
சில நாட்கள் முன் இதை பதிவில் எழுதினீர்களா? பார்த்தமாதிரியே தெரியவில்லை.. ஒருவேளை, இங்கே கவிதை வடிவம் கொடுத்து, அங்கே வேறு மாதிரி எழுதியிருந்தீர்களோ?

அறியாமையே சுகமென்றிருப்பது அவரவர் விருப்பம். யாரும் தேடு, கண்டுபிடி என்று நிர்பந்திக்கிறார்களா என்ன! அப்படியே சொன்னாலும் நாம்தான் கேட்டுவிடுவோமா!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@நெல்லைத்தமிழன் : //..பெரிய விஷயத்தில் காலை வைத்திருக்கிறீர்கள்..// இப்படி நானே ஸ்வயம் சிக்கிக்கொள்வது எனது வழக்கங்களில் ஒன்று.. மேலும் இது எப்படிச் செல்லப்போகிறது எனப் ...மேலும் வாசிக்க

@நெல்லைத்தமிழன் : //..பெரிய விஷயத்தில் காலை வைத்திருக்கிறீர்கள்..//

இப்படி நானே ஸ்வயம் சிக்கிக்கொள்வது எனது வழக்கங்களில் ஒன்று.. மேலும் இது எப்படிச் செல்லப்போகிறது எனப் பார்க்க நானும் ஆவலாகிறேன், ஆர்வம் குன்றாதிருக்கும் என்கிற நம்பிக்கையுடன்.

வேதகாலம் என நாம் குறிப்பிடுவதை, ஆய்வாளர்கள் கிறிஸ்துவிற்கு சுமார் 3000-3500 வருடங்களுக்கு முன்னர் இருந்த காலமாக இருக்கலாம் என மதிப்பிடுகிறார்கள். தோராய மதிப்பீடுதான் இது. மேற்கத்திய தத்துவ விசாரணையின் ஆரம்பம் என்பது கிறிஸ்துவுக்கு 400 வருடங்களுக்கு முன்னர்தான். மேலே, ஜிஎம் பி-சாருக்கு கொடுத்திருக்கும் பதிலையும் காண்க.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Geetha Sambasivam : நானும் ஓரளவாவது புரிந்துகொண்டு, மேற்கொண்டு எழுத முயற்சிக்கிறேன்.. Like Like ...மேலும் வாசிக்க

@Geetha Sambasivam :

நானும் ஓரளவாவது புரிந்துகொண்டு, மேற்கொண்டு எழுத முயற்சிக்கிறேன்..

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ஸ்ரீராம் : வாருங்கள். தொடருங்கள்..நானும் தொடர்ந்து பயணிக்க முயற்சிக்கிறேன். Like Likeமேலும் வாசிக்க

@ஸ்ரீராம் : வாருங்கள். தொடருங்கள்..நானும் தொடர்ந்து பயணிக்க முயற்சிக்கிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Balasubramaniam G.M : அப்படிப் பார்த்தால், இங்கு ஒன்று சொல்கிறேன். மேற்கத்திய தத்துவமரபின் (Western Philosphical thought) ஆரம்பப்புள்ளிகளில் ஒன்றாக, ஆரம்ப நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ...மேலும் வாசிக்க

@Balasubramaniam G.M :
அப்படிப் பார்த்தால், இங்கு ஒன்று சொல்கிறேன். மேற்கத்திய தத்துவமரபின் (Western Philosphical thought) ஆரம்பப்புள்ளிகளில் ஒன்றாக, ஆரம்ப நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கிரேக்க தத்துவஞானியான சாக்ரட்டீஸ். கி.மு.4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நன்றாகக் கவனியுங்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு சுமார் 350 வருடங்களுக்கு முன். அவருடைய மாணாக்கரான ப்ளாட்டோவும் (Plato), அவருடைய சீடரான அரிஸ்ட்டாட்டிலும் (Aristotle) அடுத்தடுத்த 60-70 ஆண்டுகளில் தோன்றி வாழ்ந்தவர்கள். சாக்ரட்டீஸ் தொடங்கிவைத்த மேற்கத்திய நன்னெறிவகை தத்துவம் (Western Moral Philosophy) அவரது வாய்வழிதான் வெளிவந்தது. அவரது நேரடி சீடர்களால் முதலில் கேட்டறியப்பட்டு, தொடர்ந்து வந்த சீடர்களின் வாய்வழியேதான் முதலில் கிரீஸிலும் பின் வேறு மேற்கத்திய நாடுகளுக்கும் பரவியது-அடுத்த சுமார் 1400 ஆண்டுகள் மேற்கத்திய தத்துவம் வாய்-காது-வாய் என்றுதான் பயணித்தது! பாவம், அதற்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.

ஏனெனில், காகிதம் என்கிற சங்கதி சீனாவில் கி.பி.2-ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனர்களால் ரகசியமாக கையாளப்பட்டு, பின்னர்தான் மெல்ல ஊர்ந்த காகிதம், முதலில் மத்தியகிழக்கிற்கும், வெகுவருடங்கள் கழித்தே ஐரோப்பாவிற்கும் போய்ச்சேர்ந்தது. அது ஐரோப்பா வந்தடைகையில் கிறிஸ்துவிற்குப் பின் 11-ஆம் நூற்றாண்டு நடந்துகொண்டிருந்தது!

வாய்வழி ஆரம்பித்ததுதான் என்பதனாலேயே, முன்னோர்களின் தத்துவ, ஆன்மீகக் கருத்துகளை மனிதகுலம் அலட்சியப்படுத்திவிடமுடியாது. இதில் (இந்திய/கிரேக்க ஞான/தத்துவ மரபுகள்) கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் ஒன்றுண்டு. இத்தகைய ஆன்மீகஞானியரிடம்/ தத்துவஞானியரிடம் பாடம் கேட்டு அவற்றைப் பரப்பிய சீடர்களும், பின்னர் வந்த முனிவர்களின்/ஞானிகளின் சீடராகி/ மாணாக்கராகி கேட்டறிந்து மேலும் எடுத்துச் சென்றவர்களும் – ஒன்று அவர்களும் ஞானியர்/தத்துவவாதிகள் என அக்காலத்திலேயே மதிக்கப்பட்டவர்கள் அல்லது கற்றறிந்த மேதைகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆதலால் பின்வந்தவர்களின் சொல்லாடல்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாமே தவிர, கருத்தாடலில், தத்துவத்தின் ஆன்மாவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை எனலாம்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@திண்டுக்கல் தனபாலன் : காத்திருக்கிறேன் என்றாலே போதுமானது. ‘ஐயா’ என்றதும் அதிர்கிறது உடம்பு! இது ஒரு தனி உலகமாயிற்றே.. இதற்குள் புகுவதா, ...மேலும் வாசிக்க

@திண்டுக்கல் தனபாலன் :

காத்திருக்கிறேன் என்றாலே போதுமானது. ‘ஐயா’ என்றதும் அதிர்கிறது உடம்பு!

இது ஒரு தனி உலகமாயிற்றே.. இதற்குள் புகுவதா, வேண்டாமா.. நமது தலை தாங்குமா, தப்புமா எனத் தயங்கியே வெகுநாளிருந்தேன். தெரிந்ததை அல்லது தெரிந்ததுபோல் தோன்றுவதைக் கொஞ்சம் பகிர்ந்து வைப்போம் என ஒரு அசட்டுத் துணிச்சலில் இறங்கிவிட்டேன். அவன் செயலே அனைத்தும்..

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ கீதா: //..தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..// அழகாக மனதிலாடும் பழைய பாடல். கேட்டு நாளாகிறது. பாடிப்பார்க்கலாம் என்றால் ...மேலும் வாசிக்க

@ கீதா: //..தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ..// அழகாக மனதிலாடும் பழைய பாடல். கேட்டு நாளாகிறது. பாடிப்பார்க்கலாம் என்றால் வார்த்தைகள் வசப்பட மாட்டேன்கிறது!

அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் இப்போதெல்லாம் நீங்கள் எபி-க்குள் நுழைவதைப் பார்க்கிறேன்! உங்கள் பதிவையும் படித்தேன் . பதில் போடுவேன். ஸ்லோகங்கள், உபநிஷதம் என்று படித்துக்கொண்டிருக்கிறேன் – கிரிக்கெட்டிற்கிடையே..

ஆவின் அலுத்ததால், நந்தினியோடு அரட்டை அடிக்க இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டேன். வெல்கம் டு ‘பெண்களூர்’(வார்த்தை உபயம் கீதா சீனியர் !). கரண்ட்டு கட்டு, வாட்டர் கட்டு என்று உபத்ரவங்கள் இருக்கும்தான். இருந்தாலும் அவ்வப்போது குளுகுளு வென இருப்பதால் கோபம் குறைய வாய்ப்பிருக்கிறது!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@துளசிதரன்: ஜப்பானிய சமுகம் பார்க்க, பழக சுவாரஸ்யமானது. மொழிப்பிரச்னை பெரும்பிரச்னை. (ஆங்கிலம் தெரியா அசடுகள்). அவ்வளவு எளிதில் ஊழல் செய்து தப்பித்துவிடமுடியாது அங்கே. இன்னும், ...மேலும் வாசிக்க

@துளசிதரன்: ஜப்பானிய சமுகம் பார்க்க, பழக சுவாரஸ்யமானது. மொழிப்பிரச்னை பெரும்பிரச்னை. (ஆங்கிலம் தெரியா அசடுகள்).
அவ்வளவு எளிதில் ஊழல் செய்து தப்பித்துவிடமுடியாது அங்கே. இன்னும்,
வாழ்வியல் நெறிகளில் மதிப்புள்ளவர்கள் அவர்கள்.

@ கீதா: நானும் இதனை ( விட்ட பொருள் அடுத்த நாள் அதே இடத்தில் கிடைக்கும் அதிசயத்தை) அங்கேதான் கண்டேன். அடுத்தவர் பொருளைத் தொடமாட்டார்கள் – நம்மவர்களுக்கு நேரெதிர்..

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Mrs.Mano Saminathan : வருகை , கருத்துக்கு நன்றி. யூ-ட்யூபில் பாடலைக் கேட்கலாம். அவர்களின் சப்-டைட்டில்ஸைப் படிக்க ஆரம்பித்தால், தமிழோடு, ஆங்கிலமும் மறந்துபோகும். அத்தகைய ...மேலும் வாசிக்க

@Mrs.Mano Saminathan : வருகை , கருத்துக்கு நன்றி.

யூ-ட்யூபில் பாடலைக் கேட்கலாம். அவர்களின் சப்-டைட்டில்ஸைப் படிக்க ஆரம்பித்தால், தமிழோடு, ஆங்கிலமும் மறந்துபோகும். அத்தகைய தெள்ளுமணிகளின் மொழிபெயர்ப்புகள் அதிகம் அங்கே.

இருந்தாலும், அர்த்தம் தெரியாமல் தமிழ்ப்பாட்டை ரசிக்கும் பிறமொழிக்காரர்கள் , யூ-ட்யூப் மூலம் அந்த பாடல் என்ன சொல்கிறது என ஓரளவுக்குத் தெரிந்துகொள்கிறார்கள் எனலாம்!

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க