பதிவர்
வவ்வால்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
உளவியல் அடிப்படையில் பலவீனமானார்கள் கடவுள் இருக்கார்னு நம்புறாங்க, அதே பலவீனம், சாத்தான் ,பேய், பில்லி சூன்யம் இருக்கும்னு நம்ப வைக்குது. கடவுள் இருக்குனு நம்பும் எவரும் ...மேலும் வாசிக்க
உளவியல் அடிப்படையில் பலவீனமானார்கள் கடவுள் இருக்கார்னு நம்புறாங்க, அதே பலவீனம், சாத்தான் ,பேய், பில்லி சூன்யம் இருக்கும்னு நம்ப வைக்குது.

கடவுள் இருக்குனு நம்பும் எவரும் பில்லி சூனியம் குறித்து பயப்படவே செய்வார்கள்.

கடவுளை வச்சு பொழப்பு நடத்தும் பிராமணர்களுக்கு இணையாக பில்லி சூனியம் வச்சு பொழப்பு நடத்துறாங்க அப்பிராமணர்கள் :-))

பில்லி சூனியத்தினை எடுப்பதற்கு பரிகார பூஜை என சொல்லி மீண்டும் பிராமணர்கள் காசு பார்த்துடுவாங்க.

# பில்லி சூனியம் இல்லைனு சொல்லுறிங்களே , பிராமணர்கள் பிருத்தியங்காரா தேவிக்கு மிளகா அபிஷேகம் செய்து , சத்ருசம்ஹார பூஜை செய்தால் எதிரிகள் அழிவாங்கனு வியாபாரம் செய்றாங்க அது மட்டும் நடக்குமானு ஆராய்ச்சி செய்து சொல்லவும் :-))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவி, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வடுகர்/வடகர் தான் படகர் என்பதற்கு சான்று என்ன? சும்மா அம்போக்கா "வ" ப ஆச்சுனு சொல்லுவது வடமொழி தான் ...மேலும் வாசிக்க
கோவி,

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வடுகர்/வடகர் தான் படகர் என்பதற்கு சான்று என்ன?

சும்மா அம்போக்கா "வ" ப ஆச்சுனு சொல்லுவது வடமொழி தான் தமிழுக்கே தாய்னு சொல்லுவது போன்ற காமடியே அவ்வ்.

# தமிழ் நாட்டில் இன்னமும் "வடுகர்" இனக்குழுவின் எச்சமாக மக்கள் இருக்காங்க,அவங்க பேசுவது தெலுங்கு.

உதாரணமாக சாதி அடிப்படையில் "வடுக செட்டியார்கள்" என தெலுங்கு பேசும் செட்டியார்களை தான் சொல்கிறார்கள், எனஏ மலைவாழ் படுகர் தான் சங்ககால வடுகர் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவி, // All the Programming languages has 1000s of reserved words that is in English only.// "Reserved english ...மேலும் வாசிக்க
கோவி,

// All the Programming languages has 1000s of reserved words that is in English only.//

"Reserved english words" என சொல்றிங்களே, ஏன் ஆங்கில சொற்களை மட்டும் ரிசர்வ் செய்யனும், அது மட்டும் கணினிக்கு எப்படி புரியும் என கேள்வி எழவில்லையா?

நான் சொன்னது அக்கேள்விக்கான பதில், உங்கள் தரப்பில் "ஆங்கிலம் எப்படி கணினிக்கு" புரியும் என்பதற்கு விளக்கம் இருந்தால் தரவும்.

Reserved english words" என ஒருப்பதில் சொன்னால் அது அப்படித்தான் என விடாமால் ஏன் என கேட்டால் மட்டுமே , ஆங்கிலம் எப்படி கணினி மொழியாச்சு என்பது புரிய வரும், நாம வழக்கமா என் ,எப்படி,எதற்கு எனக்கேட்டு சுயமாக தேடிப்பார்த்து விடுவது வழக்கம் :-))

#//வடமொழிக்கு சொல்லப்படும் அதே போன்ற காரணங்கள் திராவிட மொழிகளுக்கும் பொதுவானது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். :)//

நானும் வடமொழி என எல்லா மொழிக்குமே அப்படியான சாத்தியக்கூறு இல்லாத நிலையில் பேச்சுக்கு மட்டுமே "கணினி" மொழி என சொல்லிக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளேன்.

புதுசா பைனரி லாஜிக்கில் "numerical machine code" & assembly language" உருவானால் மட்டுமே பிற மொழிகளில் நிரல்கள் எழுதினால் சிறப்பாக கணினி இயங்கும் என்பதே தற்போதுள்ள நிலை.

---------

குலவுசனப்பிரியன்,

விளக்கத்துக்கு நன்றி!

நீங்க கொடுத்த தளத்தில் அசம்ப்ளி குறியீடுகள் ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து நான் சொல்லிட்டேன் என நினைக்கிறேன் , ஆனால் பைனரி குறியீட்டில் ஆங்கில எழுத்துக்களுக்கான "பைனரி பயன்ப்படுகிறது. மேலும் ரிஜிஸ்டர்கள் குறிக்கவும் ஆங்கிலம் பயன்ப்படுகிறது.

அந்த தளத்தில் ஹெக்சா டெசிமல் மதிப்பினை கொடுத்திருக்கிறார்கள், அதிலும் ஆங்கில எழுத்துக்கள் இருக்கு, மேலும் ஃப்ளாக்ஸ் என பயன்ப்படுத்துவதிலும் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன தானே.

மவுரிஸ் வில்க்ஸ் 1949 இல் EDSAC கணீனி வடிவமைத்த போது பைனரி லாஜிக்கில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியதால் , கணினியின் பிரதான மொழியாக ஆங்கிலம் பயன்ப்படுகிறது என படித்துள்ளேன் , அதன் அடிப்படையிலே நான் சொன்னது.

ஆங்கிலம் பிரதானமாக பைனரி லாஜிக்கில் இருக்க காரணம் அதற்கான பிட் அலோகேஷன் குறைவு என்பதால் , கணினி சில்லில் இருக்கும் குறைவான மெமரியில் பயன்ப்படுத்துவது எளிது என்பதும் ஒருக்காரணம்.

கணினி சில்லின் ரிஜிஸ்டர் ஆக செயல்ப்படும் ஸ்டேட்டிக் மெமரி என்பது இப்ப வரையிலும் 5 கேபி என்றெ இருக்கு, இதில் தான் கணினி சில்லு தயாரிக்கும் போதே அழியாமல் பதிக்கிறார்கள், மின்சாரம் இல்லை என்றாலும் தகவல்கள் அழியாது.

மற்ற மெமரி எல்லாம் மின்சாரம் இல்லை என்றாலும் அழிந்து விடும். ஹார்ட் டிஸ்க் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது செகண்டரி மெமரி தான், அதை வைத்து சிபியு வை உயிர்ப்பிக்க இயலாது.

எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெமரில இருக்கு, அதுல ஆங்கில அடிப்படையில் நியுமெரிக் மெசின் கோட் இருக்கு என்பதே எனது புரிதல்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விட்டுப்போச்சு, கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.மேலும் வாசிக்க
விட்டுப்போச்சு,

கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கோவி, //கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ ...மேலும் வாசிக்க
கோவி,

//கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ :)//

கணினி வேகம் இவ்விடத்தில் முக்கியமல்ல, மேலும் கணினி என்ன தான் வேகமாக இயங்கினாலும், ஒரு சைக்கிளுக்கு எத்தனை பிட்ஸ் கையாளும் என்பது தான் "அதன் செயல் திறன்" ஆகும். ஆச்சர்யம் என்னனா இப்போ வேகமா இருக்குனு சொல்லுற கணினிகள் எல்லாமே இந்த அளவு கோளில் ரொம்ப நாளா "ஸ்டேட்டிக்" ஆக நிக்குது அவ்வ்!

ராம் அளவை கிகாபைட் சொல்றாங்க, ஹார்ட் டிஸ்க்கில டெர்ரா பைட் வந்துடுச்சு, ஏன் இன்னும் cpu register size 5 KB என கொசுமுட்டை சைசில இருக்கணும் என சிந்தித்ததேயில்லையா, அல்லது L1 கேஷ் மெமரி ஏன் வெறுமனே 64 கேபி இருக்கணும் ஒரு ஜிபி போட்டுக்க கூடாதா என்ன?

இன்டெர்னலா கணினி சிப்புக்குள்ள போய் மாற்ற யாருக்கும் விருப்பம் இல்லையோ என்னமோ தெரியல , 1949 இல் மவுரிஸ் வில்க்ஸ் என்ற கணினியாளர் உருவாக்கின பைனரி லாஜிக்கில் தான் இன்னமும் மெசின் லாங்கேஜ் எழுதுறாங்க, அவர் சொன்ன லாஜிக் யூனிட் சைசில் தான் ரெஜிஸ்டர் மெமரி இன்னமும் இருக்கு.

அப்போ அசெம்ப்ளீ லாங்வேஜில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியாச்சு , இன்னமும் அதான் பயன்பாட்டில் இருக்கு, எனவே வேற மொழில நிரல் எழுதினாலும் சிபியுக்கு புரியாது, எனவே அதற்கு புரியவைக்க மறுபடியும் ஆங்கிலத்துக்கு மாத்தி அப்புறம் பைனரியாக சிபியுக்கு அனுப்பனும் ,இதனால் ஆங்கிலம் அல்லாத மொழியில் நிரல் எழுதினாலும் வேகமாக இயங்காது.

கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பாத்திருப்பிங்க, இது போல கம்பைலரில் மொழிமாற்றமும் செய்யனும்னா எத்தனை பிழைகள் வரும்னு யோசிக்கவும்.

# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மன் கூட "அவங்க மொழியில" நிரல் எழுதி முயற்சிக்கலை, எல்லாருமே இன்டர்ஃபேஸ் அ மட்டுமே மொழிமாற்றம் செய்துப்பாங்க, நிரல்களை ஆங்கிலத்துலவே கையால்கிறார்கள்.

# ரஷ்யா ஆரம்பத்துலவே ரஷியன் நிரல்கள் ,மெசின் லாங்க்வேஜ் என சொந்தமாக செய்து , பின்னர் பொருளாதார நலிவால் ஊத்தி மூடி இருக்கு, இத்தனைக்கும் அவங்க ternary லாஜிக் , பைனரி அல்ல.

சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் கணீனி மொழி, தமிழ் கணினி மொழினு " ஜம்பம் விடலாம் , உண்மையில் பயன்ப்படுத்தவே முடியாது அவ்வ்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிக விரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட ...மேலும் வாசிக்க
//மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிக விரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும்,//

இது பொதுவாக நினைப்பது, உண்மையில் இன்னமும் கணீனிகள் எல்லாம் பழைய எனியாக் மெமரி ஆக்கிடெக்சரில் தான் இயங்குது, பிராசசருக்கு நேரடியாக பயன்படும் மெமரி அளவு இப்போ வரைக்கும் 64 கிலோபைட் தான் L1 cache memory அளவு இதான். இதுல தான் எவ்ளோ பெரிய புரோகிராம், மென்பொருள் என்றாலும் பிராசசரில் வச்சு வேலை செய்ய முடியும் அவ்வ்..

மல்டி கோர் / செர்வர் வகையில் கொஞ்சம் கூடுதல் L1 cache memory வைக்கிறாங்க அப்படி செய்வதால் தான் விலை அதிகம் வைக்கிறாங்க, L1 cache memory தான் நேரடியாக பிராசரின் டிரான்ஸ்சிஸ்டரின் மேலேயே அமைக்கப்படுவது, , இவ்வாறு செய்வது கடினமான வேலை என நினைக்கிறேன் ,ஏன் எனில் ரொம்ப காலமாக 8 கேபில இருந்து இப்போ தான் 64 கேபி ஆக்கியிருக்காங்க,

இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டில் ரெஜிஸ்டர் கேஷ் மெமரி என இருக்கு அதோட அளவு 5 கிலோ பைட் தான் , அதை வச்சு தான் மொத்தமாக கணினி என்ன வேலை செய்யனும் என பைனரி வச்சு, அசெம்பிளி லேங்வேஜில் கட்டளைகள் எழுதி வச்சிருக்காங்க, பிராசசர் செய்தவுடன் கணீனியில் எடுத்து மாட்டி ஏலை செய்ய முடியாது, அதனை மேற்கண்ட மெமரியில் "பிராசசர் புரோகிராமிங்க்" செய்யணும்.

இப்படி செய்ய எந்த மொழியும் தேவையில்லை, ஆனால் ஒரு அடையாளத்துக்கு , அசெம்ப்ளி மொழியில் எழுதும் போது, ஆங்கில குறியீடுகளை பயன்படுத்துறாங்க, அதுவும் கூட காரணம் என்னவெனில் , ஆங்கில எழுத்துக்கு குறைவான பிட் அலோகேஷன் போதும் என்பதால் தான்.

எனவே சிப் லெவலில் இருக்கும் குறைவான மெமரியில் தமிழோ, சமஸ்கிருதமோ பயன்ப்படுத்தினாலும் அதிக பிட் அலோகேஷன் தேவைப்படும் என்பதால் " பிராசசிங்கிற்கு கிடைக்கும் மெமரி" குறையவே செய்யும். எனவே கணினியின் திறனும் குறைய செய்யும் அவ்வ்!

மற்றபடி அப்ளிகேஷன் நிரல்களை எழுத மொழி ஒரு தடையே இல்லை ,என்ன மொழியில் எழுதினாலும் கம்பைளரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அசெம்ப்ளி மொழியில் தான் பிராசருக்கு "வேலை செய்யக்கொடுக்கப்படும். எனவே அசெம்ப்ளி மொழியில் சமஸ்கிருதத்தின் செயல்பாடு என்னனு யாராவது நிறுபிச்சுக்காட்டினால் , கணினிக்கு சமஸ்கிருதமே ஏற்றதுனு ஒத்துக்கலாம்.

# கணினிலாம் நவீனமாகிடுச்சு, ஏகப்பட்ட ஆபரெட்டிங் சிஸ்டம் வந்துடுச்சு ,எல்லாம் எளிதாகிடுச்சு என்பதான தோற்றம் இருந்தாலும் , இன்னும் பிராசசருக்குள்ள செயல்ப்படுத்த பயன்ப்படுத்தும் வழிமுறைகள் ஆதிகாலத்துல கண்டுப்பிடிச்சது தான் , கணியில் விண்டோஸ், லினக்ஸ்னு ஆபரேட்டிங் சிஸ்டம் போட்டிருக்கோம்னு அதான் வேலை செய்துனு நினைச்சிட்டிருப்போம் , ஆனால் கணினியை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ,BIOS இல் பதியப்பட்ட டாஸ் (disk operative syStem)அடிப்படையிலான நிரலே , அது தான் பிராசசருக்கு கம்பியூட்டரில் இன்னின்ன பாகம் இருக்கு, இதுல விண்டோஸ் இருக்குனு அடையாளம் காட்டும் , கணினியில் இருக்கும் அwindows ஆபரேட்டிங்க் சிஸ்டமே கணினிக்கு செகண்டரி ஆபரேட்டிவ் சிஸ்டமாக தான் அறிவிக்கப்படும் :-))

windows உடைஞ்சிட்டாலும் டாசில் பூட் செய்ய இயல்வது இதனால் தான்.

எனவே ஹார்ட்வேர் லெவலில் கணீனிக்கான மொழி அசெம்ப்ளி லேங்வேஜும் ,அதுக்கு 0,1 உம் தான் தேவை வேற எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம் அவ்வ்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புரச்சிமணி, //இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். // அப்போ பொண்ணுங்கள ஈவ் டீசிங் செய்யவும், டாஸ்மாக்கில சரக்கடிச்சிட்டு சலம்பல் பண்ணவும் கத்துக்கிட்டிங்களா ...மேலும் வாசிக்க
புரச்சிமணி,

//இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். //

அப்போ பொண்ணுங்கள ஈவ் டீசிங் செய்யவும், டாஸ்மாக்கில சரக்கடிச்சிட்டு சலம்பல் பண்ணவும் கத்துக்கிட்டிங்களா பேஷ் பேஷ் :-))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பால கணேஷர், செம போடு போடுறிங்க :-)) உங்க நண்பருக்கு , காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் இன்னும் வித்தியாசமே தெரியலை, அதை விட ரி மேக் ...மேலும் வாசிக்க
பால கணேஷர்,

செம போடு போடுறிங்க :-))

உங்க நண்பருக்கு , காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் இன்னும் வித்தியாசமே தெரியலை, அதை விட ரி மேக் என்பது பற்றியும் புரியலை அவ்வ்.

டோட்டல் ரிகால் என்ற படம் அர்னால்ட் நடிச்சு 90 களீல் வந்தது அதை தான் 2012 இல் மீண்டும் டோட்டல் ரிகால் என்ற பெயரிலேயே ரிமேக் செய்தார்கள், அது தெரியாம "அவதார்" கதை தான் டோட்டல் ரிகால்னு புதுசா கண்டுப்பிடிக்கிறார் அவ்வ்வ்!

மேலும் ஹாலிஉட்டில் 90% படங்கள் முன்னரே வெளியான நாவல் அல்லது காமிக்சின் உரிமை வாங்கி எடுக்கப்படுவது தான்.

லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் என்பதும் புத்தகமா வந்தது(காமிக்ஸும் இருக்கு) அதே போல அவஞ்ஜர்ஸும் காமிக்ஸ் ஆக வந்தது, எனவே "எழுத்தாள அல்லது பப்ளிஷரிடம் உரிமை வாங்கி எடுக்கப்பட்டதை "காப்பி அடிச்சதா" சொல்ல முடியாது. காப்பிக்கதை என வழக்கு போடனும் என்றால் எழுத்தாளர் மேல தான் போடணும், அப்படி போடுவதாக இருந்தால் புத்தகமாக வந்த போதே போட்டிருக்க மாட்டாங்களா என்ன?

நம்ம ஊரில் எழுத்தாளர் கிட்டேயும் அனுமதி வாங்க மாட்டாங்க , படத்தயாரிப்பாளர் கிட்டேயும் அனுமதி வாங்க மாட்டாங்க நேரா சுடுவாங்க அவ்வ்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பாதுரை சார், //சுதாரித்துக் கொண்டு என்பதற்கு உண்மையில் அர்த்தமே இல்லை - ஆரிய மாயை எதிர்ப்போர் திரித்த சொல் - தமிழும் இன்றி வடமொழியும் இல்லாத ...மேலும் வாசிக்க
அப்பாதுரை சார்,

//சுதாரித்துக் கொண்டு என்பதற்கு உண்மையில் அர்த்தமே இல்லை - ஆரிய மாயை எதிர்ப்போர் திரித்த சொல் - தமிழும் இன்றி வடமொழியும் இல்லாத ரெண்டுங்கெட்டான்.//

ஆரிய மாயை எதிர்ப்போர் மீது என்ன கோபமோ?

சுதாகரிப்பு , காரியாலயம், காரியதரிசி, ஜாகை , குமாஸ்தா அபிஷ்டு, அசமஞ்சம் என்பதான வடமொழி கலந்த மணிப்பிரவாள தமிழ் நடையினை , கல்கி, தேவன், ல.ச.ரா, நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி போன்றோர் படைப்புகளில் அதிகம் காணலாம், அவர்கள் யாரும் ஆரிய மாயை எதிர்ப்பாளர்கள் அல்ல!

இது போன்ற சொற்களை பேச்சு வழக்கில் திரிபாக பேசுவதனை "மயிலாப்பூர், மாம்பல வாசிகளிடம் அதிகம் காணலாம் ,அவங்களூம் ஆரிய மாயை எதிர்ப்பாளர்கள் அல்லவே.

மாம்பலத்துல பேச்சு வழக்கில் சுதாரிப்பு என்றால் வட சென்னையில் உசாரு (உஷாரு)

விழித்துக்கொள்வது என நீட்டி முழக்கி தமிழில் எழுதலாம் ஆனால் பேச்சு வழக்கில் "முழிச்சிக்கிட்டான்" தானே :-))

சுதாகரிப்பு என்ற சொல்லின் வேர்ச்சொல் "சுதா" என்பது அமிர்தத்தினை குறிப்பது , சுதாகரிப்பு என்பது அமிர்தம் கொடுப்பது என்ற பொருளீல் இல்லாமல் உயிர்ப்பிப்பது அல்லது உயிர்த்தலை குறிக்க " மறைந்த(இறந்த) சந்திரன் மீண்டும் வருவதை ,உயிர்ப்பதை சுதா சந்திரன் என்கிறார்கள், அதாவது பிறை நிலா, வளர்பிறை, என தமிழில் சொல்லலாம், சந்திரன் என்பதும் வடமொழி தானே!!!

உயிர்க்கொடுக்கும் பெண் "சுதா" ,ஆண் "சுதாகர்" சுதாகர் என்பது சந்திரனை நேரடியாக குறிக்கும் சொல் அல்லனு நினைக்கிறேன்.
---------

பாலகணேஷர்,

பதிவுக்கு வந்தமா பதிவைப்பத்தி நாலு வார்த்தை சொல்லாமல் பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டு கொல்றானே என "மைண்ட் வாய்சில்"(மனக்குரல்? மனம் வடமொழினு அப்பாத்துரை சார் சொல்லிடுவாரு, எனவே டமிலில் "மைண்ட் வாய்ஸ்"னே வச்சிப்போம்) திட்டுறது கேட்குது அவ்வ்!

நல்ல புத்தக விமர்சனம், ஒரு கதை விடாம புத்தகத்தில இருக்க எல்லா கதைப்பத்தியும் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க , நூலாசிரியர் 'ராமலட்சுமி" அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு ...மேலும் வாசிக்க
//சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்ட, பாமரர்களும் பேச எளிமையான வடிவனால் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, //

இந்தக்கதைய நம்பி ஏமாறனுமா அவ்வ்வ்!

சிங்கப்பூர் மலெசியாவில் முழுக்க ஆங்கில அடிமைகள் ஆகிட்டாங்க, இந்தியாவில் ஆங்கிலமா , வட்டார மொழியா, இல்லை , இந்தி ஆ என இழுப்பறி எனவே சிங்கப்பூர் ,மலேசியாவை எல்லாம் மொழிக்கு உதாரணம் காட்டுவது கேலிக்கூத்து.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனைவருக்கும் அவசியமான சொம்படிப்பது எப்படினும் விளக்க குறிப்பு போட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும்!!!மேலும் வாசிக்க
அனைவருக்கும் அவசியமான சொம்படிப்பது எப்படினும் விளக்க குறிப்பு போட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும்!!!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆ.வி பாஸ், //வவ்வால் பாஸ், அசத்தல்.. தெளிவான விளக்கம்!! // நன்றி! அப்புறம் கோயம்புத்தூர்ல தான் "institute of forest genetics and ...மேலும் வாசிக்க
ஆ.வி பாஸ்,

//வவ்வால் பாஸ், அசத்தல்.. தெளிவான விளக்கம்!! //

நன்றி!

அப்புறம் கோயம்புத்தூர்ல தான் "institute of forest genetics and tree breeding" என இந்திய வனமரங்கள் பற்றிய ஆய்வு மையம்ம் இருக்கு,(மேட்டுப்பாளையத்துல வனவியல் கல்லூரி இருக்கு) அவங்க ரொம்ப நாளுக்கு முன்னர் முள் இல்லாத இந்திய புரோசோபிஸ் வகை மரத்தினை கொண்டு வந்து கொடுத்தால் பத்தாயிரம் பரிசுனு விளம்பரம்லாம் கொடுத்தாங்க ,சொக்கா பத்தாயிரம் நமக்கு தான்னு அல்ப ஆசையில என்க ஊருல காடெல்லாம் தேடிப்பார்த்து , கடைசில அந்த வகை மரத்தை நம்மாளுங்க விறகா கொளுத்தியும் , ஆடு மாடுங்க மேஞ்சும் அழிச்சுட்டாங்க ,இப்போ எங்கோ மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டில மனுசங்க கண்ணுக்கு அகப்படாம இருக்குனு தெரிஞ்சது அவ்வ்!

அவ்ளோ ஈசியா கிடைக்கிறாப்போல இருந்தா பேப்பர்லவா விளம்பரம் கொடுப்பான்கனு கூட எனக்கு ஓசிக்க தெரியலை அவ்!

அந்தக்காலத்தில இது மாரி புதையல் வேட்டைலாம் போறதுண்டு அவ்வ்!

முள் இல்லாத புரோசோபிஸ் வகை மரத்தை கண்டுப்பிடிச்சு , இப்போ இருக்கு ம் மரத்துக்கு மாற்றாக பரப்பணும் என திட்டமாம்,ஆனால் இன்னும் செய்தா மாரி தெரியலை: -))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு. முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என ...மேலும் வாசிக்க
பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு.

முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என இம்மரம் குறித்து எழுதியதில் விலாவாரியா அலசி இருக்கோம்!

live tree fence ஆக அக்காலத்திலேயே பயன்ப்பட்ட மரம் என்பதால் வேலி ஆகப்பயன்ப்படும் மரம் "வேல மரம்" என அழைக்கப்பட்டது , அதில் பட்டைகள் கறுப்பாக இலைகள் அடர் பச்சையாக இருப்பதை கருவேல மரம் என்றார்கள். Babul என இந்தியில் சொல்வார்கள், இதான் பல் விளக்கப்பயன்ப்பட்ட மரம் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என பழமொழியில் வரும் மரம் :-))

புரோசோபிஸ் ஜூலிபுளோரா என்பது தான் இறக்குமதி செய்யப்பட்டது , ரெண்டும் வேற வேற ஸ்பீசீஸ் (acacia sps)ஆனால் புரோசோபிஸ் மரங்களும் முள்ளுடன் வேலியாகப்பயன்ப்பட்டதாலும், தோற்றத்தில் ஒத்து இருந்ததாலும் அதனையும் வேலி மரம் என்ற பொருளீல் சீமைக்கருவேல மரம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

புரோசோபிஸ் ஜூலிப்புளோரா தான் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று , இந்தியாவில் காடுகளீன் பரப்பு குறைவாக இருக்கு என அதிகரிக்க மத்திய அரசின் வன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இம்மர விதைகளை விமானம் மூலம் நாடெங்கும் தூவியதாக சொல்வார்கள்.

புரோசோபிஸ் வகையிலேயே இந்திய மரங்களும் உண்டு , அவை சாதுவானவை ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன , இவற்றில் "இனிப்பு" வகைக்கூட இருக்கு, அதே போல முள் இல்லாத வகையும் இருக்கு, நம்ம ஊரு மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து பரவுவதில்லை என்பதால் இப்பொழுது அருகிவிட்டதாக சொல்கிறார்கள்.

இதே போல பார்த்தீனியம் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தப்போது ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட "அன்னிய களைச்செடி" தான். நம்ம நாட்டுல "குவாரண்டைன்" சரியாக செய்வதும் இல்லை கண்காணிப்பதும் இல்லை. கட்டிங் வாங்கிட்டு எல்லாம் சரியா இருக்குனு "கிளியரன்ஸ்" கொடுத்துடுவாங்க , கூடிய சீக்கிரம் எபோலா வைரஸ் இறக்குமதி செய்தாலும் செய்வாங்க அவ்வ்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு. முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என ...மேலும் வாசிக்க
பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கருவேல மரம் வேறு , நீங்க சொல்லும் கருவேல மரம் வேறு.

முன்னர் கூட ஒருப்பதிவர் மரங்களை வெட்டுங்கள் என இம்மரம் குறித்து எழுதியதில் விலாவாரியா அலசி இருக்கோம்!

live tree fence ஆக அக்காலத்திலேயே பயன்ப்பட்ட மரம் என்பதால் வேலி ஆகப்பயன்ப்படும் மரம் "வேல மரம்" என அழைக்கப்பட்டது , அதில் பட்டைகள் கறுப்பாக இலைகள் அடர் பச்சையாக இருப்பதை கருவேல மரம் என்றார்கள். Babul என இந்தியில் சொல்வார்கள், இதான் பல் விளக்கப்பயன்ப்பட்ட மரம் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என பழமொழியில் வரும் மரம் :-))

புரோசோபிஸ் ஜூலிபுளோரா என்பது தான் இறக்குமதி செய்யப்பட்டது , ரெண்டும் வேற வேற ஸ்பீசீஸ் (acacia sps)ஆனால் புரோசோபிஸ் மரங்களும் முள்ளுடன் வேலியாகப்பயன்ப்பட்டதாலும், தோற்றத்தில் ஒத்து இருந்ததாலும் அதனையும் வேலி மரம் என்ற பொருளீல் சீமைக்கருவேல மரம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

புரோசோபிஸ் ஜூலிப்புளோரா தான் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று , இந்தியாவில் காடுகளீன் பரப்பு குறைவாக இருக்கு என அதிகரிக்க மத்திய அரசின் வன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இம்மர விதைகளை விமானம் மூலம் நாடெங்கும் தூவியதாக சொல்வார்கள்.

புரோசோபிஸ் வகையிலேயே இந்திய மரங்களும் உண்டு , அவை சாதுவானவை ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன , இவற்றில் "இனிப்பு" வகைக்கூட இருக்கு, அதே போல முள் இல்லாத வகையும் இருக்கு, நம்ம ஊரு மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்து பரவுவதில்லை என்பதால் இப்பொழுது அருகிவிட்டதாக சொல்கிறார்கள்.

இதே போல பார்த்தீனியம் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்தப்போது ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட "அன்னிய களைச்செடி" தான். நம்ம நாட்டுல "குவாரண்டைன்" சரியாக செய்வதும் இல்லை கண்காணிப்பதும் இல்லை. கட்டிங் வாங்கிட்டு எல்லாம் சரியா இருக்குனு "கிளியரன்ஸ்" கொடுத்துடுவாங்க , கூடிய சீக்கிரம் எபோலா வைரஸ் இறக்குமதி செய்தாலும் செய்வாங்க அவ்வ்!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காரிகன், விரிசல் ,வில்லங்கம்னுலாம் யோசிக்க தேவையில்லை,ஒவ்வொருவருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு, அவ்வெல்லைக்கு போனது தெரியாம போயிடுறோம், எனவே "கதவடைப்பு" செய்றாங்க , பிறிதொரு சந்தர்ப்பத்தில் ...மேலும் வாசிக்க
காரிகன்,

விரிசல் ,வில்லங்கம்னுலாம் யோசிக்க தேவையில்லை,ஒவ்வொருவருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு, அவ்வெல்லைக்கு போனது தெரியாம போயிடுறோம், எனவே "கதவடைப்பு" செய்றாங்க , பிறிதொரு சந்தர்ப்பத்தில் "பூங்கதவே தாழ்திறவாய்"னு பதிகம் பாடி கதவை திறக்க வச்சிட வேண்டியது தான் :-))

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க