பதிவர்
நெல்லைத்தமிழன்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
என்ன இப்படி பொசுக்குன்னு எழுதிட்டீங்க. இந்திய அணி, 6+ இடத்திலிருக்கும் அணிகள் மோசமல்ல, அவங்களும் வலிமையானவங்கதான் என்று காட்ட முனைந்தது. ஸ்ரீலங்கா, வலிமையான ...மேலும் வாசிக்க

என்ன இப்படி பொசுக்குன்னு எழுதிட்டீங்க.

இந்திய அணி, 6+ இடத்திலிருக்கும் அணிகள் மோசமல்ல, அவங்களும் வலிமையானவங்கதான் என்று காட்ட முனைந்தது.

ஸ்ரீலங்கா, வலிமையான பங்களாதேஷ் – இவங்க இருவரிடமும் இந்தியா மோசமாக விளையாடும் என்று என் மனசுக்குத் தோணுது. தவான் மிக முக்கியமானவர் என்று காட்டிவிட்டார். தட்டுத் தடுமாறி ப்ளே ஆஃப்க்கு இந்தியா போகுமா?

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தன்னம்பிக்கையோடு கூடிய பதிவு. அதற்கேற்ப வாய்ப்புகளும் உங்களைத் தேடிவந்திருக்கின்றன. ஆமாம்…கன்னடம் நன்கு எழுதப் படிக்கக் கற்க, (பேசவும்) நல்ல புத்தகம் ரெகமெண்ட் பண்ணுங்களேன்….. 7-8ம் ...மேலும் வாசிக்க

தன்னம்பிக்கையோடு கூடிய பதிவு. அதற்கேற்ப வாய்ப்புகளும் உங்களைத் தேடிவந்திருக்கின்றன.

ஆமாம்…கன்னடம் நன்கு எழுதப் படிக்கக் கற்க, (பேசவும்) நல்ல புத்தகம் ரெகமெண்ட் பண்ணுங்களேன்….. 7-8ம் வகுப்பில் நன்கு பேசத் தெரியும்…இப்போ சுத்தமாக ஒன்றும் நினைவில் இல்லை. எழுதப் படிக்கவும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டக்வர்த் முறையில் ஓவருக்கு 25 ரன்னுக்கு மேல் எடுக்கணும் என்ற நிலை, மழை நின்றபிறகு பாகிஸ்தானுக்கு வந்தது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும். விஜய் ...மேலும் வாசிக்க

டக்வர்த் முறையில் ஓவருக்கு 25 ரன்னுக்கு மேல் எடுக்கணும் என்ற நிலை, மழை நின்றபிறகு பாகிஸ்தானுக்கு வந்தது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும்.

விஜய் சங்கர், விக்கெட் எடுக்காமல் ரன் கொடுத்திருந்தால், ரசிகர்கள் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருப்பார். கடைசி ஓவர்களில் பேட் செய்ய வந்து டெஸ்ட் மேட்ச் ஆடினதை யார் பொறுத்திருப்பார்கள்? அவரது அனிமேடட் (அடடா சிக்சருக்கு அடிக்கலையே என்பதுபோல) முக பாவம், எரிச்சலை உண்டாக்கியது. 350க்குமேல் போகவேண்டியதைத் தடுத்துவிட்டார் விஜய்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளிநாட்டுல இந்த மாதிரி ஒற்றுமையா இருக்கறவங்களும் இருக்காங்க, ஆனா பெரும்பாலும் அவங்க டிரான்ச்பரண்டா இருக்கறதுனால இது சாத்தியமாகுது. இருவரும் பிரிவது, அவர்களது சொந்த முடிவாக இருக்கும். ...மேலும் வாசிக்க

வெளிநாட்டுல இந்த மாதிரி ஒற்றுமையா இருக்கறவங்களும் இருக்காங்க, ஆனா பெரும்பாலும் அவங்க டிரான்ச்பரண்டா இருக்கறதுனால இது சாத்தியமாகுது. இருவரும் பிரிவது, அவர்களது சொந்த முடிவாக இருக்கும்.

நம்ம நாட்டுல, குடும்ப அமைப்பே, இரு குடும்பங்களின் உறவு என்பதாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும், பிடிக்கலைனாகூட உறவு தொடருது. அதுனால ரொம்ப நம்ம நாட்டைப் பற்றி பெருமை கொள்வதில் அவ்வளவு அர்த்தம் இருக்கிறதுபோல் தெரியலை. ஆனாலும் பெரும்பான்மை, எப்படி இருந்தாலும் இவளுடந்தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

இந்தத் தடவை இந்த ஒற்றைப் பாயிண்டை வாங்கியே பாகிஸ்தான் ப்ளே ஆஃபுக்கும், தகுதியான டீம் வெளியேறுதலும் நடக்குமா?

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏகாந்தன் சார்… ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சிறந்த டீம் என்றாகிவிடாது. கோஹ்லி அளவுக்கு அதிகமாக மெதுவாக விளையாடினாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. மைல்ஸ்டோன்கள் என் இலக்கல்லா ...மேலும் வாசிக்க

ஏகாந்தன் சார்… ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சிறந்த டீம் என்றாகிவிடாது. கோஹ்லி அளவுக்கு அதிகமாக மெதுவாக விளையாடினாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. மைல்ஸ்டோன்கள் என் இலக்கல்லா என்று காண்பிக்கவே மெதுவாக விளையாடினாரோ?

கேப்டன் கோஹ்லியிடம் நான் சீரியஸ்னெஸ்ஸைக் காணவில்லை. அசால்டாக பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டு அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். இந்தத் தடவை ப்ளே ஆஃபுக்குப் போவோமா? 2019ன் யுவராஜ் யார்? ரவி சாஸ்திரி கிளீன் போல்ட்தான். உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் அணித் தலைவர் ஆவார்னு நினைக்கிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லா எழுதியிருக்கீங்க. மம்தாவுக்கு நல்ல பதிலை வாக்காளர்கள் கொடுத்திருக்காங்க. சந்திரபாபு நாயுடுக்கும் நல்ல பதில்தான். லாலு எங்க இருக்கார்னு தேடணும். ராகுல் காந்திதான் ...மேலும் வாசிக்க

நல்லா எழுதியிருக்கீங்க.

மம்தாவுக்கு நல்ல பதிலை வாக்காளர்கள் கொடுத்திருக்காங்க. சந்திரபாபு நாயுடுக்கும் நல்ல பதில்தான். லாலு எங்க இருக்கார்னு தேடணும். ராகுல் காந்திதான் பாவம்… எந்த டிராமாவும் எடுபடலை (அப்படியில்லை. 15%க்கும் அதிகமான சீட்டுகளை இம்முறை வாங்கியிருக்கிறார். பெருத்த முன்னேற்றம் என்று சொல்லவும் ஆட்கள் உண்டு). நல்லவேளை…ஸ்டாலின் இரண்டு சீட்டுகள் கம்யூனிஸ்ட்-மா க்குக் கொடுக்கலைனா, அவங்களுக்கும் பாரளுமன்றத்தில் உருப்படியா யாரும் இருக்கமாட்டாங்க.

இந்த எதிர்க்கட்சிகளின் நல்ல நேரம்…21ம் தேதி மீட்டிங் நடக்கலை. நடந்து, ஆ வூன்னு பேசியிருந்தாங்கன்னா, தாங்கள் வெளியிட்டவைகளைத் தாங்களே 23ம்தேதி தின்னுமாறு நடந்திருக்கும்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க