பதிவர்
தமிழன்


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 18 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
கில்லர்ஜி - இது இந்தியன் மென்டாலிட்டி. பொதுவா இந்தியர்கள், அவர்களது வாழ்விடங்களை (வீடு) ஓரளவு சுத்தமாக வைத்துக்கொள்வார்கள், தாங்கள் ஓரளவு சுத்தத்துடன் இருப்பார்கள், ஆனால் பொது இடங்களைப் ...மேலும் வாசிக்க
கில்லர்ஜி - இது இந்தியன் மென்டாலிட்டி. பொதுவா இந்தியர்கள், அவர்களது வாழ்விடங்களை (வீடு) ஓரளவு சுத்தமாக வைத்துக்கொள்வார்கள், தாங்கள் ஓரளவு சுத்தத்துடன் இருப்பார்கள், ஆனால் பொது இடங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். இது நம் நாட்டு மக்களின் குணம். நம்ம வியாதிக்கு அடுத்தவன் மருந்து சாப்பிடமுடியுமா? நாமதான் திருந்தணும். வாத்தியார் சொல்வார், மாணவர்கள் கடைபிடிக்கணும். பிரதமர் சொல்லிவிட்டார், மற்றவர்கள் கடைபிடிக்கணும்.

காக்கை குப்பையைத் தொட்டியில் போடுது. பூனையும் சுத்தமாக இருக்கும் பிராணி. மனிதர்கள் சுய'நலம் மிக்கவர்கள்.

கலாம் அவர்கள் ஒரு எக்செப்ஷனல் (தனித்துவம் வாய்ந்த அபூர்வமான) பிறவி. என்ன செய்வது. நல்லவர்களை இயற்கை 100 ஆண்டுகள் வாழச்செய்வதில்லை. கெட்டவர்கள் விரைவில் மடிவதுமில்லை. (த ம காலையிலேயே போட்டாச்சு)

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என் அன்புக்குரிய, ஓவியர் ஜெ.... அவர்களின் படத்துக்கான கதைக்கருக்கள். 1. தாய் தந்தைக்கு ஒரே பெண். தன் கணவனுடன் வேறு இடத்தில் இருக்கிறாள். தாய்க்கு ...மேலும் வாசிக்க
என் அன்புக்குரிய, ஓவியர் ஜெ.... அவர்களின் படத்துக்கான கதைக்கருக்கள்.

1. தாய் தந்தைக்கு ஒரே பெண். தன் கணவனுடன் வேறு இடத்தில் இருக்கிறாள். தாய்க்கு உடம்பு முடியவில்லை. தான் போய்ப் பார்த்துக்கொண்டு தந்தைக்கும் உணவு சமைத்துவைத்து ஓரிரு மாதம் இருந்துவிட்டு வரவேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு கணவன், 'அது அவர்கள் பாடு' என்று சொல்கிறான். அவள், ஓரிரு வாரமாவது போய்வருகிறேனே என்று கேட்கிறாள். அதெல்லாம் முடியாது, மீண்டும் மீண்டும் இதைப்பற்றிப் பேசாதே என்று சொல்லிவிட்டு, பேப்பர் படிப்பதில் ஆழ்கிறான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் நீர் முட்டிக்கொண்டுவருகிறது. அழுதாலும் என்ன சொல்வானோ, அங்கே தன் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ.

2. கிராமத்திலிருந்து சென்னைக்கு தம்பி வேலை கிடைத்து வந்திருக்கிறான். அவன் நம்மோடு தங்கட்டுமே. அவனுக்கு நகரம் பழகும்வரை நம்மோடு இருந்தால், எனக்கும் பேச்சுத்துணை, எங்க அம்மா அப்பாவுக்கும் கொஞ்சம் கவலை இருக்காது என்று கணவனைக் கேட்கிறாள். சும்மா உங்க வீட்டுக்காரங்களுக்கு நாம செலவழிக்கமுடியாது, எப்பயாச்சும் பார்க்கவேணா வரட்டும், மத்தபடி அவன் வாழ்வை அவந்தான் பாத்துக்கணும் என்று கறாராகச் சொல்கிறான் கணவன். அவளுக்கு தம்பிகிட்டயோ அல்லது அப்பா/அம்மா கிட்டயோ என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. கண்களில் கண்ணிர் வருகிறது, இப்படி கணவன் விட்டேத்தியாக இருக்கிறானே என்று. தான் திருமணம் ஆகாதபோது, தன் அண்ணனும் அண்ணியும் எப்படித் தன்னைத் தன் குழந்தை மாதிரித் தாங்கினார்கள் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணிர் வரப்பார்க்கிறது.

3. அழகையும் சொந்த வீட்டையும் பார்த்துத் தான் திருமணம் செய்துகொண்ட தன் கணவன், வேலைக்குப் போகாமல், சோம்பேறியாக வீட்டிலேயே வளைய வருவதையும், இருக்கும் காசைச் செலவழித்துக்கொண்டு ஹாயாக இருப்பதையும் பார்த்து, அவனைச் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறாள். அவனோ, காலையில் வெறும் பேப்பரை மேய்ந்துகொண்டு, காபி டிபன் சாப்பிட்டுவிட்டு, வெறும்ன ஊர் சுத்திவிட்டு பொழுதுபோக்குகிறான். இன்றைக்காவது தீர்மானமாகச் சொல்லவேண்டும் என்று ஆரம்பித்த்போது, 'உன் வேலையைப் பார்' என்று கடும் சொற்களால் கணவன் சொல்லிவிட்டு, எப்போதும்போல் பேப்பர் படிக்க ஆழ்ந்துவிடுகிறான். அதை நினைத்து மனைவிக்குக் கண்ணில் கண்ணீர் வருகிறது.

இப்படி எத்தனையோ யோசித்து எழுதலாம் (பொறுமை இருந்தால்)

ஜெ... அவர்களின் ஓவியங்கள் ரொம்பவும் செக்சியாக இருக்கும். நிறைய தடவை கதைக்கான படமாக இருக்காது. அவர், அப்புசாமி கதைகளுக்கும் இன்னும் பல கதைகளுக்கும் சிறப்பான பொருத்தமான ஓவியங்கள் வரைந்து இருப்பதால், அவர் சம்பந்தமில்லாமல், முக்கியமில்லாத சீனுக்கு பெண்கள் படத்தை வரையும்போது, எனக்கு, பத்திரிகை ஆசிரியர் ஜெ....விடம் இந்தமாதிரி படம் வரையுங்கள் என்று (அந்தக் காலத்தில் கவர்ச்சி ஸ்டில்கள் இல்லாத குறையைப் போக்க) சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றும். அவருடைய டிரேட் மார்க் என்று பலவற்றைக் குறிப்பிடலாம் (சிலவற்றை இங்கு எழுதக்கூடாது). என்னால் உடனே வரைந்து காண்பிக்கமுடியும். அதில் ஒன்றுதான், டி.ஷர்ட் வாசகங்கள். (ஆனால் இது அவர் கண்டுபிடித்தது என்று எண்ணவேண்டாம். இப்போதும் சில பிராண்டுகளில் பலவிதமான வாசகங்கள் கொண்ட அத்தகைய டி.ஷர்டுகள் வந்துகொண்டிருக்கின்றன). அவருடைய பெண்களின் போஸ், இயற்கையாக அப்படி இருக்கும் போஸ்கள் அல்ல. ரொம்ப செயற்கையாக இருக்கும். (சரி..சரி.. போதும்)

அவர் ஒருதடவை எழுதியிருந்தார். வெளி நாட்டு டூர் போனபோது (பாரிஸ்?), டாய்லட் எங்கிருக்கு என்று கேட்டபோது அவர்களுக்குப் புரியவில்லை. உடனே வரைந்து காண்பித்தார் என்று எழுதியிருந்தார். ரொம்ப டேலன்டட் பெர்சன்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நானாக இருந்திருந்தால் மூங்கிலுக்குள் பலவித காய்கறிகளை (உருளை, வெங்காயம், வாழை, கீரை போன்று) பஜ்ஜி மாவில் தோய்த்து மூங்கிலுக்குள் வைத்து வெஜ் ஆப்ஷன் கொடுத்து கலெக்‌ஷன் பார்த்திருப்பேன். ...மேலும் வாசிக்க
நானாக இருந்திருந்தால் மூங்கிலுக்குள் பலவித காய்கறிகளை (உருளை, வெங்காயம், வாழை, கீரை போன்று) பஜ்ஜி மாவில் தோய்த்து மூங்கிலுக்குள் வைத்து வெஜ் ஆப்ஷன் கொடுத்து கலெக்‌ஷன் பார்த்திருப்பேன். இன்னொரு ஆப்ஷன் மூங்கில் வெஜ் பிரியாணி வகைகள். த ம

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
False ceilingல பல்ப் பாயின்டுகளுக்குத் தேவையான வோல்டேஜ் வருகிறதா என்று செக் பண்ணுகிறாரா? கவிதையை ரசிக்கமுடிந்தது. சாதாரண அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே போட்டி பொறாமை இருக்கும்போது, இரட்டைப் ...மேலும் வாசிக்க
False ceilingல பல்ப் பாயின்டுகளுக்குத் தேவையான வோல்டேஜ் வருகிறதா என்று செக் பண்ணுகிறாரா?

கவிதையை ரசிக்கமுடிந்தது. சாதாரண அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே போட்டி பொறாமை இருக்கும்போது, இரட்டைப் பிறவிகளுக்குள், இருவருக்கும் வித்தியாசம் உடலளவில் இல்லாதபோதும் மனத்தளவில் இல்லாது போகுமா?

எனக்குப் பிடித்த ஓவியர் ஜெ....க்கு அப்புறம் வருகிறேன். படத்தைப் பார்த்தவுடன் பல கதைக்கான கருக்கள் ஞாபகம் வருகிறது.

நல்ல கலவை. த ம.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யார் எழுதினார் என்பது அவசியமில்லை கா.மை சார். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. உண்மையும்கூட, (ஆனால் “மசான வைராக்யம்” போல் மறந்துவிடக்கூடியது) ஆனால் கோடியில் (அல்லது பத்துலட்சத்தில்) ...மேலும் வாசிக்க

யார் எழுதினார் என்பது அவசியமில்லை கா.மை சார். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. உண்மையும்கூட, (ஆனால் “மசான வைராக்யம்” போல் மறந்துவிடக்கூடியது) ஆனால் கோடியில் (அல்லது பத்துலட்சத்தில்) ஒருவர்தானே காந்தீயச் சிந்தனை கொண்டவர்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யார் எழுதினார் என்பது அவசியமில்லை கா.மை சார். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. உண்மையும்கூட, (ஆனால் “மசான வைராக்யம்” போல் மறந்துவிடக்கூடியது) ஆனால் கோடியில் (அல்லது பத்துலட்சத்தில்) ...மேலும் வாசிக்க

யார் எழுதினார் என்பது அவசியமில்லை கா.மை சார். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. உண்மையும்கூட, (ஆனால் “மசான வைராக்யம்” போல் மறந்துவிடக்கூடியது) ஆனால் கோடியில் (அல்லது பத்துலட்சத்தில்) ஒருவர்தானே காந்தீயச் சிந்தனை கொண்டவர்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடர்கிறேன். அனுமன் தரிசனம் ஆச்சு.மேலும் வாசிக்க
தொடர்கிறேன். அனுமன் தரிசனம் ஆச்சு.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
'நல்ல புத்தக அறிமுகம். த .ம.மேலும் வாசிக்க
'நல்ல புத்தக அறிமுகம். த .ம.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த அர்த்தத்துல யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். தா - தாவு அல்லது தாவுதல். உதாரணம் தாமரை- தாவுகின்ற மான் என்று அர்த்தம் ஈ- பிறருக்குக் ...மேலும் வாசிக்க
இந்த அர்த்தத்துல யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

தா - தாவு அல்லது தாவுதல். உதாரணம் தாமரை- தாவுகின்ற மான் என்று அர்த்தம்
ஈ- பிறருக்குக் கொடுத்தல். (கீ.சா. Flyனு நினைச்சிருப்பாங்க) ஈதல் இசைபட வாழ்தல்
இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்கும். கா வா வா கந்தா வா எனை கா வா வேலவா- காக்க வருவாய் என்ற அர்த்தம்.
இன்னும் இருக்கிறது. போதும்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
3. நாலாவது படம் காஜல் அகர்வால் 2. தீ, கூ (கூவு அல்லது கூவுதல்), தை (தைத்துவிடு அல்லது தையல்-பெண், மாதம்), நீ, சீ, தூ, ...மேலும் வாசிக்க
3. நாலாவது படம் காஜல் அகர்வால்
2. தீ, கூ (கூவு அல்லது கூவுதல்), தை (தைத்துவிடு அல்லது தையல்-பெண், மாதம்), நீ, சீ, தூ, வ-தமிழ் எண்கள் நிறையச் சொல்லலாம். வ என்றால் quarter

கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
1. சைனீஸ் வருடங்களின் பெயராக, எலி, பன்றி, குரங்கு,குதிரை ஆகியவை உள்ளன. 2. நீ, வா, போ-செல், சா-இறந்து போ, கா-காப்பாற்று, வை, கோ-பசு, பா, பூ, ...மேலும் வாசிக்க
1. சைனீஸ் வருடங்களின் பெயராக, எலி, பன்றி, குரங்கு,குதிரை ஆகியவை உள்ளன.
2. நீ, வா, போ-செல், சா-இறந்து போ, கா-காப்பாற்று, வை, கோ-பசு, பா, பூ, ஆ-பசு, பை, கை, மா-மாமரம்/பழம், மை-கண்ணுக்கிடும் மை, சே.. இன்னும் யோசிக்கிறேன்.
த ம

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன். த ம +1மேலும் வாசிக்க
ரசித்தேன். த ம +1

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லிச்சி மரம் இப்போதான் பார்க்கிறேன். தொடர் இப்போதான் சூடுபிடிச்சிருக்கு. தடுப்பு போட்டு பெண்கள் காசு வசூலிக்கின்றார்களா? திருப்பதி போகும் வழியில் இது ரெகுலர் காட்சியாயிற்றே. த மமேலும் வாசிக்க
லிச்சி மரம் இப்போதான் பார்க்கிறேன். தொடர் இப்போதான் சூடுபிடிச்சிருக்கு. தடுப்பு போட்டு பெண்கள் காசு வசூலிக்கின்றார்களா? திருப்பதி போகும் வழியில் இது ரெகுலர் காட்சியாயிற்றே. த ம

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வித்தியாசமான கதை. த ம +1மேலும் வாசிக்க
வித்தியாசமான கதை. த ம +1

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீதாரங்கன் - பரகேசரி என்பது சோழர் பட்டம். கேசரி-சிங்கம்.மேலும் வாசிக்க
கீதாரங்கன் - பரகேசரி என்பது சோழர் பட்டம். கேசரி-சிங்கம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 18 )  ஒரே பக்கத்தில் பார்க்க